மெல்போர்ன் டெஸ்ட் வர்ணனையாளர் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதி

மெல்போர்ன் டெஸ்ட் வர்ணனையாளர் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதி

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் திங்கட்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 59 வயதான மார்க் நிக்கோலஸ் சேனல் 9-ற்காக வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனார். இன்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போதும் வர்ணனை செய்து கொண்டிருந்தார்.

இன்றும் நிக்கோலஸிற்கு அதே வலி ஏற்பட்டது. இதனால் இன்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

Source: Maalaimalar

Author Image
murugan