சென்னையில் 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப் போட்டி

சென்னையில் 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப் போட்டி

சென்னையில் 12 அணிகள் பங்கேற்கும் மாநில ஆக்கிப் போட்டி வருகிற 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

சென்னை:

இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மன மகிழ்மன்றம் சார்பில் மாநில அளவிலான அழைப்பு ஆக்கிப்போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

இந்தப்போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 6 நாட்கள் எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இதில் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி., தெற்கு ரெயில்வே, ஐ.சி.எப்., வருமான வரி, மத்திய கலால் வரி, தமிழ்நாடு போலீஸ், சென்னை நகர போலீஸ், இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்), ஆக்கி அகாடமி, ஏ.ஜி.எஸ். அலுவலகம், லயோலா கல்லூரி ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

நாக்அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.1 லட்சம் ஆகும். சாம்பியன் பட்டம் அணிக்கு ரூ.50 ஆயிரமும், 2-வது இடத்துக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடத்துக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆட்டத்தில் சிறந்த வீரர் விருதும், தொடர் நாயகன் விருதும் வழங்கப்படும்.

மேற்கண்ட தகவலை இந்தியன் வங்கியின் விளையாட்டு மற்றும் மனமகிழ்மன்ற தலைவர் ஆர்.மணிமாறன், செயலாளர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் தெரிவித்தனர்.

Source: Maalaimalar

Author Image
murugan