விஜய் ஹசாரே கிரிக்கெட்: நடுவரை எதிர்த்து கைப் வெளிநடப்பு

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் சத்தீஷ்கர் அணி கேப்டன் முகமது கைப் நடுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறிது நேரம் வெளிநடப்பு செய்தார்.

கர்நாடகா வீரர் அகர்வாலுக்கு சத்தீஷ்கர் வீரர்கள் அவுட் கேட்டனர். ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரை நாடுமாறு சத்தீஷ்கர் அணி கேப்டன் முகமது கைப் கேட்டார்.

ஆனால் நடுவர்கள் வீரேந்தர் சர்மா, உமேஷ் துபே இதற்கு அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து நடுவர்களை எதிர்த்து கைப் ஆடுகளத்தை விட்டு வெளியேறி சிறிது நேரம் வெளிநடப்பு செய்தார்.

மேட்ச் நடுவர் தலையிட்டதால் கைப் மீண்டும் ஆடுகளம் வந்தார். இது தொடர்பாக அவருக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதோடு அபராதமும் விதிக்கப்பட்டது.

கைப் இந்திய அணிக்காக 125 ஒருநாள் போட்டியிலும், 13 டெஸ்டிலும் ஆடி இருக்கிறார்.

Source: Maalaimalar