12 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்து தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா

பெங்களூரு டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி கடைசி 6 விக்கெட்டுக்களை 12 ரன்கள் எடுப்பதற்குள் இழந்ததால் 75 ரன்னில் தோல்வியை தழுவியது.

பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இந்திய அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து வி்க்கெட்டுக்களை இழந்தது.

அந்த அணி ஒரு கட்டத்தில் 100 ரன்கள் வரை 3 விக்கெட்டைதான் இழந்திருந்தது. 101 ரன்னில் மிட்செல் மார்ஷ் ஆட்டம் இழந்தார். அதன்பின் வடே (101), ஸ்டார்க் (103), ஓ’கீபே 110), ஹேண்ட்ஸ்காம்ப் (110), லயன் (112) அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 112 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுக்களை இழந்தது சரணடைந்தது ஆஸ்திரேலியா.

அந்த அணி கடைசி 12 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது. முதல் டெஸ்டில் இந்தியா 12 ரன்களுக்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது ஆஸ்திரேலியா அதே நிலையை அடைந்துள்ளது.

Source: Maalaimalar