இலங்கைக்கு 488 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

இலங்கைக்கு 488 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது தென்ஆப்பிரிக்கா

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 286 ரன்னில் சுருண்டது.

பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்களில் சரணடைந்தது. 81 ரன்கள் முன்னிலையுடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது.

அந்த அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் ஸ்டீபன் குக்கின் (117) சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 351 ரன்கள் குவித்திருந்தது. டு பிளிசிஸ் 41 ரன்னுடனும், டி காக் 42 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று ஆட்டத்தை தொடங்கிய இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 406 ரன்னாக இருக்கும்போது டிக் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். இத்துடன் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. டு பிளிசிஸ் 67 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 81 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டு மொத்தமாக இலங்கையை விட 487 ரன்கள் அதிகம் பெற்றது.

இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 488 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 488 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Source: Maalaimalar

Author Image
murugan