Press "Enter" to skip to content

ரஞ்சி டிராபி அரையிறுதி: ஜார்க்கண்ட் வீரர்களுக்க டிப்ஸ் வழங்கும் டோனி

ரஞ்சி டிராபி தொடரில் முதன்முறையாக ஜார்க்கண்ட் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வரும் 1-ந்தேதி நாக்பூரில் நடைபெற இருக்கும் அரையிறுதியில் குஜராத் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

ஜார்க்கண்ட் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் டோனியில் சொந்த மாநிலம் ஆகும். தனது மாநிலம் அரையிறுதிக்கு முன்னேறியதால் வீரர்கள் சிறப்பான வகையில் விளையாட டோனி நாக்பூர் சென்று அவர்களுக்கு உதவ இருக்கிறார்.

இதுகுறித்து அந்த அணியின் மானேஜர் கூறுகையில் ‘‘நாக்பூரில் அணியின் எல்லா வகை நிகழ்வுகளிலும் டோனி கட்டாயம் இருக்க வேண்டும். அவர் நாக்பூரில் இருக்க விரும்புகிறார். அவருடன் உரையாடும் நிகழ்வுகள் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என்றார்.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு செய்யப்பட இருக்கிறது. இதனால் ஐந்து நாட்களும் அணியுடன் இருப்பாரா? என்பது சந்தேகம்தான்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.