பிக் பாஷ் டி20 லீக்: பிராவோ காயத்தால் வெளியேற்றம்

பிக் பாஷ் டி20 லீக்: பிராவோ காயத்தால் வெளியேற்றம்

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி ஸ்கார்ட்ச்செர்ஸ் அணிகள் மோதின.

சிட்னி அணி பேட்டிங் செய்யும்போது மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியின் பிராவோ பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது பேட்ஸ்மேன் அடித்த பந்தை டைவ் அடித்து பீல்டிங் செய்ய முயன்றார்.

அப்போது அவரது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் காயத்தால் கடும் வலியால் துடித்தார். இதனால் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். ஆகவே, இந்த தொடர் முழுவதும் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Source: Maalaimalar

Author Image
murugan