சீன கிளப்பின் 300 மில்லியன் யூரோ ஒப்பந்தத்தை நிராகரித்த ரொனால்டோ

போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் 2003-ல் இருந்து 2009-ம் ஆண்டு வரை இடம்பிடித்திருந்த அவர், அதன்பின் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரை சீன கால்பந்து கிளப் ஒன்று 300 மில்லியன் யூரோ டிரான்ஸ்பருக்கு அணுகியதாகவும், அதனால் அவருக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 மில்லியன் யூரோ சம்பளம் வழங்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது.

இந்த தகவலை துபாயில் நடைபெற்ற கால்பந்து விருது வழங்கும் விழாவில் ரொனால்டோவின் ஏஜென்ட் ஜார்ஜ் மென்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பணம் பெரிய விஷயம் இல்லை. ரியல் மாட்ரிட் அணிதான் அவரது வாழ்க்கை. ரியல் மாட்ரிட் அணியில் அவர் சந்தோசமாக இருக்கிறார். சீனாவிற்கு செல்வது நடக்காத விஷயம்’’ என்றார்.

Source: Maalaimalar

Facebook Comments