6 மாதத்திற்குப் பிறகு மீண்டும் களம் இறங்குகிறார் ரோஜர் பெடரர்

டென்னிஸ் அரங்கில் 17 முறை கிராண்ட்ஸ்லாம் பதக்கம் வென்று சாதனைப் படைத்தவர் ரோஜர் பெடரர். 35 வயதாகும் இவர் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் மிலோஸ் ரயோனிக்கை எதிர்த்து விளையாடினார்.

அதன்பிறகு காயம் காரணமாக சுமார் 6 மாதம் விளையாடாமல் இருந்தார். அதன்பின் தற்போது நாளை பெர்த்தில் நடைபெற இருக்கும் இரட்டையர்கள் விளையாடும் ஹோப்மன் கோப்பை தொடரில் விளையாட இருக்கிறார்.

சுவிட்சர்லாந்து அணி சார்பில் பெடரர், பென்சிக் உடன் இணைந்து களம் இறங்குகிறார்.

Source: Maalaimalar