காயம் காரணமாக டி20 தொடரில் இருந்து கப்தில் விலகல்

நியூசிலாந்து – வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்காள சேதம் 50 ஓவர்கள் முடிவில் 236 ரன்கள் சேர்த்தது. பின்னர் நியூசிலாந்து அணியின் கப்தில், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

3-வது ஓவரின் முதல் பந்தை குப்தில் சந்தித்தார். இதில் விரைவாக ஒரு ரன் எடுக்க முயற்சி செய்தார். அப்போது கப்தில் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார்.

ஆகவே, வங்காள தேசத்திற்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி 3-ந்தேதியும், 2-வது போட்டி 6-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 8-ந்தேதியும் நடைபெறுகிறது.

வங்காள தேச அணிக்கெதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:-

1. கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2. கோரி ஆண்டர்சன், 3. ட்ரென்ட் போல்ட், 4. டாம் ப்ருஸ், 5. கொலின் டி கிராண்டொமே, 6. பெர்குசன், 7, மேட் ஹென்றி, 8. கொலின் முன்றோ, 9. ஜிம்மி நீசம், 10. லூக் ரோஞ்சி, 11. சான்ட்னெர், 12. சோதி, 13. பென் வீலர், 14. நீல் ப்ரூம்.

Source: Maalaimalar