Go to ...
RSS Feed

மெதுவாக பந்துவீச்சு – ஹோல்டர் 3-வது டெஸ்டில் ஆட தடை


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கடைசி டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #WIvENG #JasonHolder #ICC

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 சோதனை தொடரில் முதல் 2 டெஸ்டில் வென்று வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் 381 ஓட்டத்தை வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 10 மட்டையிலக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி தொடங்கும் 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 2-வது டெஸ்டில் மெதுவாக பந்துவீசியதால் ஐ.சி.சி. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால் பிராத்வெயிட் அந்த டெஸ்டுக்கு கேப்டனாக இருப்பார். ஹோல்டர இடத்தில் கீமோ பவுல் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG #JasonHolder #ICC

Related Tags :

Source: Maalaimalar