Press "Enter" to skip to content

28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் டி20-யில் அதிக ஓட்டத்தை: உலக சாதனைப் படைத்தார் ‘கொலைகாரன்’ ரோகித் சர்மா

ஆக்லாந்தில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ரோகித் சர்மா 28 பந்தில் அரைசதம் அடித்ததுடன் அதிக ஓட்டத்தை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். #RohitSharma

ஆக்லாந்து:

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. முதலில் மட்டையாட்டம் செய்த நியூசிலாந்து 8 மட்டையிலக்கு இழப்புக்கு 158 ஓட்டங்கள் சேர்த்தது. பின்னர் 159 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா மட்டையாட்டம் செய்தது.

தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 28 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

ரோகித் சர்மா 35 ஓட்டத்தில்த் தொட்டபோது சர்வதேச டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்திருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை (2272) பின்னுக்குத்தள்ளி முதல் இடம்பிடித்தார்.

இந்த போட்டிக்கு முன் ரோகித் சர்மா 2238 ஓட்டங்கள் எடுத்து 2-வது இடத்தில் இருந்தார். இந்த போட்டியில் 50 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் 2288 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். கொலைகாரன் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட் போட்டியில் 4 சதம், 15 அரைசதம் விளாசியுள்ளார். பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் 2263 ஓட்டத்தைகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

Related Tags :

 ரோகித் சர்மா பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »