Press "Enter" to skip to content

கடைசி போட்டியிலும் இந்தியாவை தோற்கடித்து நியூசிலாந்து பெண்கள் அணி வெற்றி

நியூலாந்து பெண்கள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது. #NZvIND #WomenCricket

ஹாமில்டன்:

இந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 மட்டையிலக்குடுக்கு 161 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ஓட்டங்கள் (62 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் மட்டையாட்டம் குறிப்பிடும்படி இல்லை. கடைசி சுற்றில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ஓட்டத்தை தேவைப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த சுற்றில் மிதாலி-தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரி உள்பட 13 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 2 ஓட்டத்தை வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 மட்டையிலக்குடுக்கு 159 ஓட்டங்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 24 ஓட்டத்தைகளுடனும் (20 பந்து, 3 பவுண்டரி), தீப்தி ஷர்மா 21 ஓட்டத்தைகளுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். அரைசதத்துடன் 2 மட்டையிலக்கு வீழ்த்திய நியூசிலாந்து வீராங்கனை சோபி டேவின் ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.

தோல்விக்கு பிறகு இந்திய வீராங்கனை மந்தனா கூறுகையில், ‘எங்களது வீராங்கனைகள் நன்றாக போராடியதாகவே நினைக்கிறேன். இந்த தொடரை திரும்பி பார்த்தால் 70, 80 சதவீதம் வெற்றி வாய்ப்பில் இருந்தே தோற்று இருக்கிறோம். மட்டையாட்டம்கில் இந்த குறைபாட்டை நாங்கள் வெகு சீக்கிரமாக சரி செய்ய வேண்டும். யாராவது ஒரு வீராங்கனை 20 ஓவர் முழுவதும் மட்டையாட்டம் செய்ய வேண்டியது அவசியமாகும். இன்றைய ஆட்டத்தை நான் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்று விரும்பினேன். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.