Go to ...
RSS Feed

வெலிங்டன் சோதனை: நியூசிலாந்தின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 211 ஓட்டத்தில் சுருண்டது


வெலிங்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது சோதனை போட்டியில் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 211 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது. #NZvBAN

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று மழை இல்லாததால் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது.

அதன்படி தமிம் இக்பால், ஷத்மான் இஸ்லாம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷத்மான் இஸ்லாம் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 15 ரன்னிலும், முகமது மிதுன் 3 ரன்னிலும் வெளியேறினார்கள்.

தமிம் இக்பால்

தொடக்க வீரர் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி 74 ஓட்டங்கள் சேர்த்தார். தமிம் இக்பாலை தவிர மற்ற வீரர்கள் நியூசிலாந்து அணியின் டிரென்ட் போல்ட், நீல் வாக்னர் ஆகியோரின் வேகப்பந்தை வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் வங்காளதேசம் முதல் இன்னிஙசில் 211 ஓட்டத்தில் சுருண்டது. டிரென்ட் போல்ட் 3 மட்டையிலக்குடும், நீல் வாக்னர் 4 மட்டையிலக்குடுக்களும் கைப்பற்றினர்.

பின்னர் நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றுசை தொடங்கியது. அந்த அணி இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 மட்டையிலக்கு இழப்பிற்கு 38 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar