Go to ...
RSS Feed

4வது ஒருநாள் போட்டி – தவான் சதத்தால் ஆஸ்திரேலியாவுக்கு 359 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா


மொகாலில் இன்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, ஷிகர் தவானின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 359 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #INDvAUS #Rohitsharma #ShikarDhawan

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர்.

இருவரும் முதலில் இருந்தே அதிரடியாக ஆடினர். அதனால் இந்தியாவின் ஓட்டத்தை வேகம் அதிகரித்து வந்தது. இருவரும் எளிதில் அரை சதம் கடந்தனர்.

அணியின் எண்ணிக்கை 193 ரன்னாக இருக்கும்போது ரோகித் சர்மா அவுட்டானார். அவர் 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் முதல் மட்டையிலக்குடுக்கு ரோகித், தவான் ஜோடி 193 ஓட்டங்கள் எடுத்ததும் சாதனையாகும்.

அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல் தவானுக்கு ஒத்துழைப்பு அளித்தார். ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் கடந்தார். சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் 115 பந்துகளில் 3 சிக்சர், 18 பவுண்டரியுடன் 143 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல் 26 ரன்னிலும், விராட் கோலி 7 ரன்னிலும், ரிஷப் பந்த் 36 ரன்னிலும் விஜய்சங்கர் 26 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 சுற்றில் 9 மட்டையிலக்கு இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 5 மட்டையிலக்குடும், ரிச்சர்ட்சன் 3 மட்டையிலக்குடும் வீழ்த்தினர். இதையடுத்து, 359 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது.  #INDvAUS #Rohitsharma #ShikarDhawan

Related Tags :

Source: Maalaimalar