Press "Enter" to skip to content

ரோஸ் டெய்லர் இரட்டை சதம் – நியூசிலாந்து 432 ஓட்டத்தை குவிப்பு

வங்காளதேசம் அணிக்கு எதிராக 2-வது சோதனை போட்டியில் ரோஸ் டெய்லரின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி 432 ஓட்டங்கள் குவித்தது. #BANvsNZ #RossTaylor

வெலிங்டன்:

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

முதல் 2 நாள் ஆட்டமும் மழையால் ரத்து செய்யப்பட்டது. வங்காள தேசம் முதல் பந்துவீச்சு சுற்றில் 211 ஓட்டத்தை எடுத்தது. பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றுசை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 38 ஓட்டத்தை எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து 6 மட்டையிலக்கு இழப்புக்கு 432 ஓட்டத்தை குவித்து டிக்ளேர் செய்தது.

முன்னாள் கேப்டன் ரோஸ் டெய்லர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 212 பந்துகளில் 200 ஓட்டத்தை குவித்தார். அவரது 3-வது இரட்டை சதமாகும். நிக்கோலஸ் சதம் அடித்தார். அவர் 107 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 74 ரன்னும் எடுத்தனர்.

221 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது பந்துவீச்சு சுற்றுசை ஆடிய வங்காள தேசம் அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 80 ஓட்டத்தில் 3 மட்டையிலக்கு இழந்தது. #BANvsNZ

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »