Go to ...
RSS Feed

அற்புதம் நிகழ்த்திய ரொனால்டோ: ஹாட்ரிக் கோலால் யுவான்டஸை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார்


இரண்டு ஹெட்டர், ஒரு பெனால்டி என ஹாட்ரிக் கோல் அடித்து யுவான்டஸ் அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கிளப் அணிகளுக்கு இடையிலான யூரோ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தற்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு அணிகளும் தலா ஒருமுறை அந்தந்த அணிகளின் சொந்த மைதானத்தில் மோத வேண்டும்.

அதன்படி யுவான்டஸ் – அட்லெடிகோ மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான முதல் லெக் ஆட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் அட்லெடிகோ அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லெடிகோ 2-0 என யுவான்டஸை வீழ்த்தியிருந்தது. ரொனால்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்நிலையில் இன்று அதிகாலை 2-வது லெக் யுவான்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் மூன்று கோல்கள் அடித்தால்தான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் யுவான்டஸ் களம் இறங்கியது.

சொந்த மைதானத்தில் விளையாடியதால் ரசிகர்கள் அதிக அளவில் ஆதரவு அளித்தனர். இதனால் யுவான்டஸ் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தின. பந்து யுவான்டஸ் வீரர்கள் கால்களுக்கு இடையிலேயே சுழன்று சுழன்று வந்தது. அடிக்கடி அட்லெடிக் மாட்ரிட் கோல் கம்பத்தை நோக்கி பந்து சென்றது. என்றாலும் கோல் விழவில்லை.

இறுதியாக ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி அற்புதமாக கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவான்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டம் தொடங்கியதும் 4-வது நிமிடத்தில் அதாவது, ஆட்டத்தின் 49-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலையால் முட்டி மேலும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் யுவான்டஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது. இரண்டு லெக்கிலும் சேர்த்து 2-2 என இரு அணிகளும் சமமாக இருந்ததால், கோல்கள் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் யுவுான்டஸ் மிகவும் கவமான செயல்பட்டது. ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் யுவுான்டஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை சரியான பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார்.

கிறிஸ்டியோனோ ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் யுவான்டஸ் 3-2 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் நான்கு நிமிடங்கள் மிகச்சிறந்த வகையில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. அட்லெடிகோ மாட்ரிட் அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாததால் யுவான்டஸ் 3-0 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Related Tags :

Source: Maalaimalar