Go to ...
RSS Feed

இன்டியன் வெல்ஸ் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் கெர்பர்


கலிபோர்னியாவில் நடைபெற்று வரும் இன்டியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கெர்பர் காலிறுதிக்கு முன்னேறினார். #Kerber

இன்டியன் வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கடைசி காலிறுதி போட்டியில் 8-ம் நிலை வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி) – வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்தினர்.

இதில் கெர்பர் 7(7)- 6(3), 6-3 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். நாளை நடக்கும் அரையிறுதி போட்டியில் கெர்பர் – பென்சிக் (சுவிட்சர்லாந்து) மோதுகிறார்கள். மற்றொரு அரையிறுதியில் ஸ்விடோலினா (உக்ரைன்), ஆன்ட்ரீஸ்கு (கனடா) மோதுகிறார்கள்.

இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ரயோனிக் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கெக்மனோவிச்சை (செர்பியா) தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் டொசின்ன (மினி)க் தியெம் (ஆஸ்திரியா) – மோன்பில்ஸ் (பிரான்ஸ்) மோத இருந்தனர். ஆனால் மோன்பில்ஸ் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. இதனால் டொசின்ன (மினி)க் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Related Tags :

Source: Maalaimalar