Press "Enter" to skip to content

டி வில்லியர்ஸ், மொயின் அலி அபாரம் – மும்பை அணி வெற்றி பெற 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ், மொயின் அலியின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி வெற்றி பெற 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பெங்களூரு. #IPL2019 #MIvRCB

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 31-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பார்திவ் படேல், விராட் கோலி களமிறங்கினர்.

கோலி 8 ரன்னிலும், பார்திவ் படேல் 28 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய டி வில்லியர்ஸ், மொயின் அலி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்

மொயின் அலி 32 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 50 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து இறங்கிய ஸ்டோனிஸ் ஓட்டத்தை எதுவும் எடுக்காமலும், அக்‌ஷ தீப் நாத் 2 ரன்னிலும் அவுட்டாகினர்.

அதிரடியாக ஆடிய டி வில்லியர்ஸ் 51 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன்  75 ஓட்டத்தில் வெளியேறினார்.

இறுதியில், பெங்களூரு அணி 20 சுற்றில் 7 மட்டையிலக்குட்க்கு 171 ரன்களை எடுத்தது. இதையடுத்து மும்பை அணிக்கு 172 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மும்பை அணி சார்பில் லசித் மலிங்கா 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். #IPL2019 #MIvRCB

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »