Press "Enter" to skip to content

பாபர் ஆசம் சதம் வீண்: ஜேசன் ராய் வாணவேடிக்கையால் 341 இலக்கை எட்டி இங்கிலாந்து அசத்தல் வெற்றி

ஜேசன் ராய் 89 பந்தில் 114 ஓட்டங்கள் விளாச பாகிஸ்தானுக்கு எதிராக 341 ரன்களை சேஸிங் செய்து அசத்தல் வெற்றி பெற்றது இங்கிலாந்து.

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 மட்டையிலக்கு இழப்புக்கு 340 ஓட்டத்தை குவித்தது.

பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 63-வது போட்டியில் ஆடும் அவருக்கு இது 9-வது செஞ்சூரியாகும். பாபர் ஆசம் 112 பந்தில் 115 ரன்னும் (13 பவுண்டரி, 1 சிக்சர்), முகமது ஹபீஸ் 59 ரன்னும், பகர் ஜமான் 57 ரன்னும் எடுத்தனர். டாம் குர்ரான் 4 மட்டையிலக்குடும், மார்க் வுட் 2 மட்டையிலக்குடும் கைப்பற்றினார்கள். பின்னர் விளையாடிய இங்கிலாந்து 49.3 சுற்றில் 7 மட்டையிலக்குடுக்களை இழந்து 341 ஓட்டத்தை இலக்கை எடுத்து வெற்றி பெற்று சாதித்தது.

தொடக்க வீரர் ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 8-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 89 பந்தில் 114 ரன்னும் (11 பவுண்டரி, 4 சிக்சர்), பென் ஸ்டோக்ஸ் 64 பந்தில் 71 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது ஹஸ்னைன், இமாத் வாசிம் தலா 2 மட்டையிலக்குடும் ஜுனைத்கான், ஹசன் அலி தலா 1 மட்டையிலக்குடும் எடுத்தனர்.

இங்கிலாந்தின் வெற்றியில் பாபர் ஆசமின் சதம் பலன் இல்லாமல் போனது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு இருந்தது. 2-வது மற்றும் 3-வது போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. கடந்த போட்டியில் இங்கிலாந்து 359 ஓட்டத்தை இலக்கை எடுத்தது. தற்போது 341 ஓட்டத்தை இலக்கை எடுத்து 3 மட்டையிலக்குடில் வென்றுள்ளது. இதனால் உலகக்கோப்பையில் அந்த அணி கடும் சவாலாக விளங்கும். இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் லீடஸ் மைதானத்தில் நாளை நடக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.