Press "Enter" to skip to content

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டேவிட் வார்னர் அசத்தல் சதம்

டான்டனில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்து அசத்தினார்.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 17-வது லீக் ஆட்டம் டான்டனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஸ்திரேலியா ஸ்கோர் சிறப்பான வகையில் உயர்ந்தது. ஆரோன் பிஞ்ச் 84 பந்தில் 82 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் 51 பந்தில் அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 102 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 107 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.

ஓராண்டு தடைக்குப்பின் சர்வதேச போட்டியில் களம் இறங்கிய டேவிட் வார்னரின் முதல் சதம் இதுவாகும்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »