Press "Enter" to skip to content

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலெப்

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சிமோனா ஹாலெப் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

சிமோனா ஹாலெப்

விம்பிள்டன் டென்னிஸ் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் சிமோனா ஹாலெப் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

விம்பிள்டன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் 8-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்டார்.

ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சிமோனா ஹாலெப் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்திற்கு ஸ்விட்டோலினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஹாலெப் முதல் செட்டை 6-1 எனவும், 2-வது செட்டை 6-3 எனவும் கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.