Press "Enter" to skip to content

ஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ்க்கு இடமில்லை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸவெல், ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு ஆஷஸ் தொடருக்கான உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்த உடன் ஆகஸ்ட் 1-ந்தேதி இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இதற்கான 25 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

தென்ஆப்பிரிக்கா தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பான்கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.

Related Tags :

Source: Maalaimalar

Mission News Theme by Compete Themes.