Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு 242 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: உலகக்கோப்பை யாருக்கு?

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 242 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

டாஸ் வென்ற நியூசிலாந்து மட்டையாட்டம் தேர்வு செய்தது. அதன்படி ஹென்ரி நிக்கோல்ஸ், மார்ட்டின் கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்ட்டின் கப்தில் 18 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹென்ரி நிக்கோல்ஸ் உடன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதலில் நிதானமாக விளையாடியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் தொடக்கத்தில் 24 பந்தில் நான்கு ரன்களே அடித்திருந்தார். அதன்பின் நேரம் செல்ல செல்ல இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் நியூசிலாந்து 21.2 சுற்றில் 100 ஓட்டத்தில்த் தொட்டது. இதேவேகத்தில் சென்றால் நியூசிலாந்து 300 ஓட்டத்தில்த் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்  நியூசிலாந்தின் ஸ்கோர் 103 ரன்களாக இருக்கும்போது கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நிக்கோல்ஸ் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த டெய்லர் 15 ரன்னிலும், நீஷம் 19 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை எட்டுமா? என்று எதிர்பார்த்து ஏற்பட்டது.

டாம் லாதம் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து விளையாடினார். இதனால் நியூசிலாந்து 250 ரன்களை தாண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் கிராண்ட் ஹோம் 16 ஓட்டத்தில் வெளியேற, டாம் லாதம் 49-வது சுற்றில் 47 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 48.3 சுற்றில் 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது. கடைசி 9 பந்தில் 9 ஓட்டங்கள் அடிக்க நியூசிலாந்து 50 சுற்றில் 8 மட்டையிலக்கு இழப்பிற்கு 241 ஓட்டங்கள் சேர்த்துள்ளது.

பின்னர் 242 ஓட்டங்கள் அடித்தால் உலகக்கோப்பையை முத்தமிடலாம் என்ற நோக்கத்துடன் இங்கிலாந்து சேஸிங் செய்து வருகிறது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிளெங்கட் தலா மூன்று மட்டையிலக்குடுக்கள் வீழ்த்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.