Press "Enter" to skip to content

விம்பிள்டன் இறுதிப் போட்டி: முதல் செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச்

விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7(7) – 6(5) எனக் கைப்பற்றினார்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் – நம்பர் 2 வீரரான பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

முதல் செட்டில் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மாறிமாறி கேம்ஸ்-ஐ கைப்பற்றினர். ஆகவே ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7(7)-6(5) என கடும் போராட்டத்திற்குப் பின் முதல் செட்டை கைப்பற்றினார். 58 நமிடங்கள் போராடி ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.