Press "Enter" to skip to content

குவாலிபையர்-2: மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்

திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் குவாலிபையர் 2-ல் மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 176 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது திண்டுக்கல் டிராகன்ஸ்.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 தொடரின் குவாலிபையர்-2 திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிராக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வழக்கம்போல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி 14.4 சுற்றில் 101 ரன்னாக இருக்கும்போது பிரிந்தது. ஜெகதீசன் 48 பந்தில் 50 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

ஹரி நிஷாந்த் 46 பந்தில் 51 ஓட்டங்கள் சேர்த்து வெளியேறினார். ஆர். விவேக் ஒரு ஓட்டத்தில் ஏமாற்றம் அடைந்தாலும், முகமது மற்றும் சதுர்வேத் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 18 மற்றும் 19-வது ஓவர்களில் தலா இரண்டு சிக்சர்கள் விளாசினர். 13 பந்தில் 4 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 35 ஓட்டங்கள் விளாசிய சதுர்வேத் 19-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

கடைசி சுற்றில் முகமது ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 16 ஓட்டங்கள் விளாச திண்டுக்கல் டிராகன்ஸ் 20 சுற்றில் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 175 ஓட்டங்கள் குவித்தது. முகமது 9 பந்தில் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் 176 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் மட்டையாட்டம் செய்து வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »