Press "Enter" to skip to content

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?: இன்று இரவு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்பதை இன்றிரவு பிசிசிஐ அறிவிக்க இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் முடிவடைந்ததையொட்டி புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் ரவி சாஸ்திரி, ராபின் சிங், லால் சந்த் ராஜ்பூட் (இந்தியா), டாம் மூடி (ஆஸ்திரேலியா), மைக் ஹெஸ்சன் (நியூசிலாந்து), பில் சிம்மன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகிய 6 பேர் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டது.

இந்த 6 பேரிடம் இன்று மும்பையில் கபில்தேவ் தலைமையிலான குழு நேர்காணல் நடத்தியது. சிலரிடம் காணொளி கான்பிரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் பெயரை கிரிக்கெட் வாரியம் அறிவிக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.