Press "Enter" to skip to content

2வது சோதனை – 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் பந்துவீச்சு சுற்றில் விராட் கோலி இரட்டை சதமடித்து அசத்த, இந்தியா 5 மட்டையிலக்குடுக்கு 601 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

புனே:

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது சோதனை போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி மட்டையாட்டம்கை தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ரோகித் சர்மா இம்முறை 14 ஓட்டத்தில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து இறங்கிய புஜாரா அகர்வாலுக்கு ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடினர். இந்த ஜோடி 138 ஓட்டங்கள் சேர்த்தது.

அரை சதமடித்த புஜாரா 58 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். இரண்டாவது தேர்வில் பொறுப்புடன் ஆடிய மயங்க் அகர்வால் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். அவர் 108 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் விராட் கோலியும், அஜிங்கியா ரகானேவும் பொறுமையாக ஆடி மேலும் மட்டையிலக்குடுகள் விழாமல் பார்த்துக் கொண்டனர். கேப்டன் விராட் கோலி அரை சதமடித்து அசத்தினார். 

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 85.1 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்புக்கு 273 ரன்களை எடுத்துள்ளது. கோலி 63 ரன்னுடனும், ரகானே 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ரகானே அரை சதமடித்தார். அவர் 59ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு புறம் தூணாக நின்ற கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவருக்கு ரவீந்திர ஜடேஜா நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 91 ஓட்டத்தில் அவுட்டானார். இருவரும் இணைந்து 225 ஓட்டங்கள் குவித்தனர்.

இதையடுத்து, இந்தியா 5 மட்டையிலக்கு இழப்புக்கு 601 ஓட்டங்கள் குவித்துள்ள நிலையில் தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை டிக்ளேர் செய்தது. கேப்டன் விராட் கோலி 254 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 3 மட்டையிலக்குடும், மகராஜ், முத்துசாமி ஆகியோர் தலா ஒரு மட்டையிலக்குடும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி தனது முதல் பந்துவீச்சு சுற்றுசை விளையாடி வருகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.