Press "Enter" to skip to content

புனே சோதனை: ஒரு வழியாக தென்ஆப்பிரிக்காவை 275 ஓட்டத்தில் சுருட்டியது இந்தியா

அஸ்வினின் தொடர் முயற்சியால் 3-வது நாள் முடிவில் தென்ஆப்பிரிக்காவை 275 ஓட்டத்தில் ஆல்-அவுட் ஆக்கியது இந்தியா.

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது சோதனை கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நடைபெற்று வருகிறது. முதல் பந்துவீச்சு சுற்றில் இந்தியா 601 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் பந்துவீச்சு சுற்றில் மட்டையாட்டம் செய்த தென்ஆப்பிரிக்கா இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 162 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 8 மட்டையிலக்குடுக்களை இழந்து திணறியது.

9-வது மட்டையிலக்குடுக்கு பிலாண்டர் உடன் மகாராஜ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்தியாவின் பந்து வீச்சாளர்களை மிகப்பெரிய அளவில் சோதித்தது. இருவரும் நிலைத்து நின்று விளையாடினர். மகாராஜ் அரைசதம் அடித்தார். பிலாண்டர் பந்துகளை தடுத்தாடுவதில் முனைப்பு காட்டினார்.

இதனால் இன்றைய 3-வது நாள் ஆட்டம் முடிவிற்குள் தென்ஆப்பிரிக்கா ஆல்-அவுட் ஆக்குவது இந்திய பந்து வீச்சாளர்களுக்கு இயலாத காரியமாகி விடுமோ? என்ற நிலை இருந்தது. அந்தவேளையில்தான் 102-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் மகாராஜ் 72 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 271 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

மகாராஜ் – பிலாண்டர் ஜோடி 9-வது மட்டையிலக்குடுக்கு 42.1 சுற்றுகள் விளையாடி 109 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த ரபாடா 2 ஓட்டத்தில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 275 ஓட்டத்தில் அனைவரும் மட்டையாட்டத்தைவிட்டு வெளியேறினர் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு மட்டையிலக்குடுக்களும், உமேஷ் யாதவ் மூன்று மட்டையிலக்குடுக்களும், முகமது ஷமி 2 மட்டையிலக்குடுக்களும் வீழ்த்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.