Press "Enter" to skip to content

பந்து வீசுவதில் விரக்தியடைந்ததே கிடையாது: நான்கு மட்டையிலக்குடுக்கள் வீழ்த்திய அஸ்வின் சொல்கிறார்

நான் விரக்தியடையமாட்டேன், மகிழ்ச்சியாகவே மீண்டும் மீண்டும் பந்து வீச விரும்புவேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது சோதனை புனேயில் நடைபெற்று வருகிறது. தென்ஆப்பிரிக்கா முதல் பந்துவீச்சு சுற்றில் மளமளவென மட்டையிலக்குடுக்களை இழந்தாலும் 9-வது மட்டையிலக்குடுக்கு ஜோடி சேர்ந்த பிலாண்டர், மகாராஜ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சுமார் 40 ஓவர்களுக்கு மேல் சந்தித்த இந்த ஜோடி 100 ஓட்டங்கள் குவித்தது.

இறுதியில் அஸ்வின் இந்த ஜோடியை பிரித்தார். முதல் பந்துவீச்சு சுற்றில் 28.4 சுற்றுகள் வீசி 69 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து நான்கு மட்டையிலக்குடுக்கள் வீழ்த்தினார்.

இந்திய பந்து வீச்சாளர்களின் பொறுமையை இந்த ஜோடி சோதித்தாலும், நான் விரக்தியடையவில்லை. மீண்டும் பந்து வீசுவது எனக்கு மகிழ்ச்சி என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘நான் பந்து வீசும்போது விரக்தியடைந்ததே கிடையாது. விரக்தி என்பதை நான் விரும்பியதே இல்லை. அதைக் காட்டிலும் மீண்டும் பந்து வீசவே விரும்புவேன். மீண்டும் மீண்டும் யார் மட்டையாட்டம் செய்ய வந்தாலும், நான் மீண்டும் பந்து வீச மகிழ்ச்சியாக இருப்பேன்.

கடைநிலை பேட்ஸ்மேன்கள் என்று மிகைப்படுத்தி பேசுகிறார்கள். யாராவது ஒருவர் சிறப்பாக மட்டையாட்டம் செய்தால், அவர் சிறப்பாக மட்டையாட்டம் செய்பவர். தற்போதைய நாளில், யாருமே மோசமாக மட்டையாட்டம் செய்பவர் அல்ல. நம்முடைய அணியில் 11-வது வீரர் வரை சிறப்பாக மட்டையாட்டம் செய்கிறார்கள்.

சிறந்த ஆடுகளத்தில் பிலாண்டர் சிறப்பாக மட்டையாட்டம் செய்யக்கூடியவர். சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக அவருடைய தடுப்பாட்ட நுட்பம் சிறப்பாக உள்ளது. இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. எங்கள் அணி கேப்டன் இதுகுறித்து முடிவு செய்வார்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.