சையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்

சையத் முஷ்டாக் அலி டிராபி: டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்

சூரத்தில் நடைபெற்ற டி20 கிரிக்கெட்டில் 165 ரன்களை சேஸிங் செய்து டெல்லிக்கு அதிர்ச்சி அளித்தது ஜம்மு-காஷ்மீர்.

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி – ஜம்மு-காஷ்மீர் அணிகள் மோதின.

முதலில் மட்டையாட்டம் செய்த டெல்லி 20 சுற்றில் 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நிதிஷ் ராணா 30 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 55 ஓட்டங்கள் சேர்த்தார்.

பின்னர் 166 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜம்மு-காஷ்மீர் அணியின் கஜுரியா- வாத்வான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கஜுரியா 22 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 49 ஓட்டங்கள் குவித்தார். அடுத்து வந்த மன்சூர் டார் 24 பந்தில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 58 ஓட்டங்கள் குவித்தார்.

வாத்வான் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 48 ஓட்டங்கள் அடிக்க ஜம்மு-காஷ்மீர் 15.5 சுற்றில் மட்டையிலக்கு இழப்பிற்கு 166 ஓட்டங்கள் எடுத்து 8 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja