சையத் முஷ்டாக் அலி டிராபி: மும்பையை துவம்சம் செய்தது மேகாலயா

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 லீக்கில் கத்துக்குட்டி அணியான மேகாலயா மும்பையை 6 மட்டையிலக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

சையத் முஷ்டாக் அலி டிராபி  டி20 லீக்கில் மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை – மேகாலயா அணிகள் மோதின. மும்பை அணி டாஸ் வென்று மட்டையாட்டம் தேர்வு செய்தது. மேகாலயாவின் நேர்த்தியான பந்து வீச்சால் மும்பை அணியால் 6 மட்டையிலக்கு இழப்பிற்கு 157 ரன்களே எடுக்க முடிந்தது.

பின்னர் 158 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேகாலயா களம் இறங்கியது. ரவி தேஜா 61 ரன்களும், சஞ்சய் யாதவ் 55 ரன்களும் அடிக்க 19.2 சுற்றில் 4 மட்டையிலக்கு இழப்பிற்கு 161 ஓட்டங்கள் அடித்து மும்பையை வீழ்த்தியது.

6-வது போட்டியில் மும்பையின் முதல் தோல்வி இதுவாகும். மேகாலயாவின் 2-வது வெற்றி இதுவாகும். தோல்வியடைந்தாலும் மும்பை முதல் இடத்தில் நீடிக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar