விவிஎஸ் லக்‌ஷ்மண் பார்வையில் இவர்தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்

விவிஎஸ் லக்‌ஷ்மண் பார்வையில் இவர்தான் இந்திய அணியின் மேட்ச் வின்னர்

இந்திய கிரிக்கெட்டின் எந்த காலக்கட்டத்திலும் அனில் கும்ப்ளேதான் மிகப்பெரிய மேட்ச் வின்னர் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் மற்றும்  கங்குலி ஆகியோர் தலைசிறந்த சோதனை பேட்ஸ்மேன்களாக திகழ்ந்தனர். இவர்கள் காலத்தில் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே மாயாஜால பந்து வீச்சால் இந்திய அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்தார்.

விவிஎஸ் லக்‌ஷ்மணிடம் இந்திய அணியின் எந்த காலக்கட்டத்திலும் மிகப்பெரிய மேட்ச் வின்னர் யார் என்று கேட்கப்பட்டது.

அதற்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் ‘‘என்னுடைய நண்பர் அனில் கும்ப்ளேதான் இந்தியாவின் மிகப்பெரிய மேட்ச் வின்னர். நான் விளையாடியபோது மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்தார்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja