Press "Enter" to skip to content

இங்கிலாந்துக்கு எதிராக வில்லியம்சன், டெய்லர் சதம் – சோதனை டிரா ஆனது

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி சோதனை போட்டி டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி சோதனை தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஹேமில்டன்:

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது மற்றும் கடைசி சோதனை கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடந்தது.

நியூசிலாந்து அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 375 ஓட்டத்தை எடுத்தது. இதற்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. அந்த அணி முதல் பந்துவீச்சு சுற்றில் 476 ஓட்டத்தை குவித்தது.

101 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-வது பந்துவீச்சு சுற்றுசை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 மட்டையிலக்கு இழப்புக்கு 96 ஓட்டத்தை எடுத்து இருந்தது. கேப்டன் வில்லியம்சன் 37 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது.

வில்லியம்சனும், டெய்லரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். முதலில் வில்லியம்சன் 231 பந்துகளில் 11 பவுண்டரியுடன் 100 ஓட்டத்தில் தொட்டார். 76-வது தேர்வில் விளையாடும் அவருக்கு இது 21-வது செஞ்சூரி ஆகும்.

அதைத்தொடர்ந்து டெய்லர் 184 பந்துகளில் 100 ஓட்டத்தில் எடுத்தார். இதில் 11 பவுண்டரியும், 2 சிக்சர்களும் அடங்கும். சிக்சர் மூலம் அவர் சதத்தை தொட்டார். 96-வது தேர்வில் விளையாடும் டெய்லருக்கு 19-வது சதம் ஆகும். தேர்வில் அதிக சதம் அடித்த நியூசிலாந்து வீரர்களில் முதல் 2 இடங்களில் அவர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி 2 மட்டையிலக்கு இழப்புக்கு 241 ஓட்டத்தை எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதோடு போட்டி முடிந்து சோதனை டிரா ஆனது. வில்லியம்சன் 104 ரன்னிலும், டெய்லர் 105 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்ததேர்வில் மொத்தம் 5 சதம் அடிக்கப்பட்டது. நியூசிலாந்து தரப்பில் லாதம், வில்லியம்சன், டெய்லர் ஆகியோரும், இங்கிலாந்து தரப்பில் பர்னஸ், ஜோரூட் ஆகியோரும் சதம் அடித்தனர்.

இங்கிலாந்து கேப்டன் ஜோரூட் இரட்டை சதம் அடித்தார். அந்த அணி ஒரு சுற்று மட்டுமே ஆடியது.

இந்த சோதனை டிரா ஆனதன் மூலம் நியூசிலாந்து அணி சோதனை தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் தேர்வில் அந்த அணி சுற்று மற்றும் 65 ஓட்டத்தை வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »