வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக மோன்டி தேசாய் நியமனம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக மோன்டி தேசாய் நியமனம்

இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. நாளைமறுதினம் (டிசம்பர் 6-ந்தேதி) டி20 தொடர் தொடங்குகிறது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவைச் சேர்ந்த மோன்டி தேசாய்-ஐ மட்டையாட்டம் பயிற்சியாளராக நியமித்துள்ளது. இவரது பதவிக் காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்தே பயிற்சியாளர் பதவியை ஏற்க உள்ளார். இவர் ஏற்கனவே கனடா அணியின் தலைமை பயிற்சியாளராகவும், 2018-ல் ஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை தகுதிச்சுற்று தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிவடைந்த ஐசிசி டி20 உலக கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் மட்டையாட்டம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

Source: Maalaimalar

Author Image
Ilayaraja