கில்கிறிஸ்ட் – மார்க் வாக் சாதனையை முறியடித்த ஆரோன் பிஞ்ச் – டேவிட் வார்னர் ஜோடி

கில்கிறிஸ்ட் – மார்க் வாக் சாதனையை முறியடித்த ஆரோன் பிஞ்ச் – டேவிட் வார்னர் ஜோடி

வான்கடே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் அடித்த ஆரோன் பிஞ்ச் – டேவிட் வார்னர் சாதனைப் படைத்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 255 ரன்னில் சுருண்டது. பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி எளிதாக 100 ரன்களை தாண்டியது. ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 100 ரன்களை தாண்டுவது இது 9-வது முறையாகும்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி தொடக்க ஜோடி அதிக முறை 100 ரன்களை தாண்டியதில் ஆரோன் பிஞ்ச் – வார்னர் ஜோடி 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

கில்கிறிஸ்ட் – ஹெய்டன் ஜோடி 16 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. கில்கிறிஸ்ட் – மார்க்வாக் ஜோடி 8 சதங்களுடன் 3-வது இடத்திலும், 7 சதங்களுடன் டேவிட் பூன் – மார்ஷ் ஜோடி 4-வது இடத்திலும் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja