பாகிஸ்தான் சென்று விளையாட வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்தது

பாகிஸ்தான் சென்று விளையாட வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்தது

வங்காளதேசம் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

வங்காளதேசம் பாகிஸ்தான் சென்று விளையாட தயக்கம் காட்டி வந்தது. ஆனால், பாகிஸ்தானில்தான் தொடர் நடக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருந்தது. இரு நாட்டு கிரிக்கெட் போர்டுக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இறுதியில் பாகிஸ்தான் செல்ல வங்காளதேசம் அணி சம்மதம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பிப்ரவரி 7-ந்தேதியும், 2-வது டெஸ்ட் ஏப்ரல் ஐந்தாம் தேதியும் தொடங்குகிறது. ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.

பாதுகாப்பு காரணத்திற்கான வங்காளதேசம் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இடைவெளிவிட்டு விளையாடுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja