ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக சோதனை சாம்பியன்ஷிப்: இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவை 3-1 என வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒன்பது முன்னணி அணிகள் 27 தொடர்களில் 71 போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த 27 தொடர்களின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என கைப்பற்றிய இங்கிலாந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து இரண்டு தொடர்களில் 9 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதன்மூலம் 146 புள்ளிகள்  பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 360 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 296 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja