ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியா ஓபன்: அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வேரேவ் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை வாவ்ரிங்கா 6-1 என எளிதில் கைப்பற்றினார். அதன்பின் 7-ம் நிலை வீராங்கனையான அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 6-3, 6-4, 6-2 என மூன்று செட்களையும் எளிதில் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஸ்வேரேவ் அரையிறுதியில் நடால் அல்லது தியெம்-ஐ எதிர்கொள்ள இருக்கிறர்ர். மற்றொரு அரையிறுதியில் ரோஜர் பெடரர் – ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja