ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

ஆஸ்திரேலியா ஓபன்: ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபனில் ரோஜர் பெடரரை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்.

ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் – 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.

காலிறுதியில் ஐந்து செட் வரை சென்று கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்ற ரோஜர் பெடரரால் ஜோகோவிச் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. முதல் செட்டில் மட்டும் நெருக்கடி கொடுத்தார். என்றாலும் டை-பிரேக்கரில் 7-1 என ஜோகோவிச் வெற்றி பெற்றார்.

ஆனால் 2-வது செட் மற்றும் 3-வது செட்டில் பெடரரால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 2-வது செட்டை 6-4 எனவும், 3-வது செட்டை 6-3 எனவும் ஜோகோவிச் கைப்பற்றி நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் – டொமினிக் தீம் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja