மணிஷ் பாண்டே போராட்டத்தால் நியூசிலாந்துக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

மணிஷ் பாண்டே போராட்டத்தால் நியூசிலாந்துக்கு 166 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் ஏமாற்ற மணிஷ் பாண்டே பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடிக்க நியூசிலாந்துக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. சைனி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

நியூசிலாந்து அணியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் களம் இறங்கவில்லை. டிம் சவுத்தி கேப்டனாக செயல்படுகிறார். டிம் சவுத்தி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கேஎல் ராகுல் அதிரடி காட்ட சஞ்சு சாம்சன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். என்றாலும் இந்தியா 4.3 ஓவரில் 48 ரன்கள் எடுத்திருந்தது.

அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னிலும் வெளியேறினார். இதனால் இந்தியாவின் ஸ்கோரில் மந்தம் ஏற்பட்டது.  கேஎல் ராகுல் போட்டியை கடைசி வரை கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் 26 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 75 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின் வந்த டுபே 12 ரன்னிலும்,  வாஷிங்டன் சுந்தர் டக்அவுட்டிலும் வெளியேற, போட்டியை கடைசி வரை கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் மணிஷ் பாண்டே.

அவர் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.  ஷர்துல் தாகூர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்து அவருக்கு உதவினார். இதனால்  இந்தியா 150 ரன்னை நோக்கி சென்றது. 19-வது ஓவரில் நவ்தீப் சைனி 10 ரன்கள் அடிக்க இந்தியா 154 ரன்னைத் தொட்டது.

கடைசி ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினால் மணிஷ் பாண்டே. ஐந்தாவது பந்தில் ஒரு ரன் அடித்து 36 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுக்க இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் அடித்தது.

மணிஷ் பாண்டே 50 ரன்னுடனும், சைனி 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் இஷ் சோதி 3 விக்கெட்டும், பென்னட் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja