ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை 1-0 என  வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி

ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை 1-0 என வீழ்த்தியது மும்பை சிட்டி எப்.சி

மும்பையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கவுகாத்தி அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது மும்பை அணி.

மும்பை:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பையில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி மற்றும் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பம் முதலே மும்பை அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அந்த அணியின் டிகோ கார்லோஸ் ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார். அதன்பின், ஆட்டம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இறுதியில், மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தியது. இதன்மூலம் மும்பை அணி புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja