ஆஸ்திரேலியா ஓபன் – முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் – முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதிபோட்டியில், முகுருசாவை வீழ்த்தி அமெரிக்காவின் கெனின் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியா ஒபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் நடைபெற்றது. 

இந்த போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் மற்றும் ஸ்பெயினின் முகுருசா ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முகுருசா சிறப்பாக ஆடி முதல் செட்டை 6-4 என கைப்பற்றினார். 

அடுத்த இரண்டு செட்களிலும் அதிரடியாக ஆடிய கெனின் 6-2, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், கெனின் 4-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் முகுருசாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார். இது கெனினின் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja