ரஞ்சி டிராபி: கர்நாடகா, பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

ரஞ்சி டிராபி: கர்நாடகா, பெங்கால் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்கால் மற்றும் கர்நாடகா அணிகள் ரஞ்சி கோப்பை காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தற்போது கடைசி லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஒரு ஆட்டத்தில் பெங்கால் – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் பெங்கால் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.

பெங்கால் முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் 151 ரன்கள் அடித்தது. பின்னர் பெங்கால் 2-வது இன்னிங்சில் 202 ரன்கள் அடித்தது. பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களம் இறங்கியது. ஆனால் 141 ரன்னில் சுருண்டது.

மற்றொரு ஆட்டத்தில் பரோடா – கர்நாடகா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கர்நாடகா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. பரோடா முதல் இன்னிங்சில் 85 ரன்களும், கர்நாடகா 233 ரன்களும் சேர்த்தனர். பரோடா 2-வது இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்தது. கர்நாடகா 149 இலக்கை 2 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja