ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்தது ஒடிசா

ஐஎஸ்எல் கால்பந்து – கவுகாத்தியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்தது ஒடிசா

புவனேஸ்வரத்தில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் கவுகாத்தி அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி பிளே ஆப் சுற்றை தக்கவைத்துக் கொண்டது ஒடிசா அணி.

புவனேஸ்வர்:

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. கவுகாத்தி (நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.) அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் 24-வது நிமிடத்தில் கவுகாத்தி அணி முதல் கோலை அடித்தது. இதனால் முதல் பாதியில் 1-0 என கவுகாத்தி அணி முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஒடிசா அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் மானுவேல் ஆன்வு 47 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைப்படுத்தினார். 

அவரை தொடர்ந்து ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் ஒடிசாவின் பெரஸ் குடெஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஒடிசா அணி 2-1 என்ற கணக்கில் கவுகாத்தி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் ஒடிசா அணி புள்ளிப்பட்டியலில் ஒரு இடம் முன்னேறி ஐந்தாம் இடத்தில் உள்ளது. இந்த வெற்றியால் ஒடிசா பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja