சிஎஸ்கே-யின் ‘குட்டி தல’சுரேஷ் ரெய்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

சிஎஸ்கே-யின் ‘குட்டி தல’சுரேஷ் ரெய்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் செல்லமாக ‘குட்டி தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

சுரேஷ் ரெய்னா தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையுடன்

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் செல்லமாக ‘குட்டி தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் எம்எஸ் டோனியை ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘குட்டி தல’ என்றும் அழைத்து வருகின்றனர்.

சுரேஷ் ரெய்னா – பிரியங்கா ஜோடிக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிரேசியா எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ரியோ எனப் பெயரிட்டுள்ளனர். ஆண்குழந்தை பிறந்துள்ளதை சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பதிவுபு மூலம் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja