வீட்டை விட்டு வெளியேறினால்… சரியான ஊதாரணத்துடன் மக்களுக்கு அறிவுறுத்திய அஸ்வின்

வீட்டை விட்டு வெளியேறினால்… சரியான ஊதாரணத்துடன் மக்களுக்கு அறிவுறுத்திய அஸ்வின்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டுவிட்டர் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டு மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸை விரட்ட வேண்டுமென்றால் சமூக விலகல்தான் ஒரே வழி. இதற்காகத்தான் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வாரங்களும் மக்கள் தங்களை கட்டுப்படுத்தி வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் சிலர் கொரோனாவின் வீரியம் தெரியாமல் வெளியில் கும்பலாக சுற்றுகின்றனர். இதனால் ஒவ்வொரு மாநில அரசும் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களுக்கு ஜெயில் தண்டனை என தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சரியான ஊதாரத்துடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டுவிட்டர் பதிவை என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் க்ரீஸ்க்கு வெளியில் நிற்பார். அவரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் செய்வார்.

இந்த படத்தை அனுப்பி ரசிகர்கள், இந்த சம்பவம் நடந்து சரியாக ஒரு வருடம் ஆகிறது என அஸ்வினிடம் நினைவுப்படுத்தினர். இந்த படத்தை டுவிட்டரில் அப்லோடு செய்த அஸ்வின், ‘‘இந்த படத்தை எனக்கு அனுப்பி சம்பவம் நடைபெற்று சரியாக ஒரு வருடம் ஆகிறது என நினைவுப்படுத்தினர்.

தற்போது நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனது நாட்டு மக்களுக்கு இந்தப்படம் ஒரு சிறந்த வகையிலான நினைவு கூறத்தக்கதாகும். வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்’’என பதிவிட்டுள்ளார்.

மேலும் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது டுவிட்டர் பெயரை lets stay indoors inida என மாற்றியுள்ளார்.

கிரிக்கெட்டில் க்ரீஸை விட்டு வெளியில் வந்தால் மன்கட் செய்யப்படுவீர்கள். அதேபோல் தற்போது வீட்டில் இருந்து வெளியே வந்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த டுவிட்டரை பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja