பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பரில் நடத்த திட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பரில் நடத்த திட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு

கொரோனா வைரஸ் கொற்று பீதியால் ரத்து செய்யப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எஞ்சிய ஆட்டங்களை நவம்பர் மாதத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும். ஐந்தாவது சீசன் கடந்த மாதம் தொடங்கியளது. மார்ச் மாதத்தின் 2-வது மாதத்தில் தொடர் முடிவடைய வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று பீதியில் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பிளே-ஆப்ஸ் சுற்று ஆட்டங்களை அரையிறுதியாக மாற்றியது. இரண்டு அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டியை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் நடத்த முயற்சி செய்தனர். ஆனால் வீரர் ஒருவர் கொரோனா அறிகுறியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது.

இதனால் உடனடியாக போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பிடியில் இருந்து உலகம் உடனடியாக மீண்டு வந்தால் போட்டியை நவம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் சிஇஓ வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த முல்தான் சுல்தான்ஸ் அணிக்கு கோப்பையை வழங்க வேண்டும் அல்லது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சீசன் ஆறுக்கு முன் மீதமுள்ள போட்டிகளை நடத்த வேண்டும் என்பது முதலில் நாங்கள் அணிகளின் உரிமையாளர்களிடம் நிலைமை குறித்து விவாதிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு நிலைமை சரியானால் மீதமுள்ள போட்டிகளை நவம்பர் மாதம் நடத்த வாய்ப்புள்ளது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja