எம்எஸ் டோனியின் பேச்சை கேட்காத செல்ல நாய்: காரணம் இவர்தானாம்?

எம்எஸ் டோனியின் பேச்சை கேட்காத செல்ல நாய்: காரணம் இவர்தானாம்?

ராஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செவழித்து வரும் எம்எஸ் டோனி, செல்ல நாயுடன் விளையாடும் வீடியோவை சிஎஸ்கே டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி, ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவா ஆகியோருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அவ்வப்போது மகளுடன் பைக்கில் செல்லும் வீடியோ போன்றவற்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சில வீடியோக்களை சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவிடுகிறது.

நேற்று டோனி வீட்டில் உள்ள செல்ல நாயுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது எம்எஸ் டோனி பந்தை மேலே தூக்கிப்போட்டு கேட்ச் என கட்டளை பிறப்பித்தார். ஆனால் அந்த செல்ல நாய் நீங்கள் சொல்லி நான் கேட்க மாட்டேன் என்ற தொனியில் அப்படியே இருந்தது.

அதன்பின் டோனி மனைவி சாக்‌ஷி பந்தை தூக்கி போட்டு ‘கேட்ச்’ என்றதும் ‘லபக்’ என பிடித்தது. அப்போது சாக்‌ஷி டோனியிடம், நான் சொன்னால் மட்டுமே நாய் கேட்கும். நீங்கள் சொன்னால் கேட்டாது என்றார்.

மீண்டும் டோனி பந்தை வீச, சாக்‌ஷி உத்தரவிட்டதும் ‘லபக்’ எனப்பிடித்தது. வேடிக்கையான இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Thala Dhoni in #yellove, dot. #WhistlePodu 🦁💛 VC: @SaakshiSRawatpic.twitter.com/z4FrGumlxC

— Chennai Super Kings (@ChennaiIPL)

May 11, 2020

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja