ஐபிஎல் 2020 பருவம் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: முதன்முறையாக நிதி குறித்து பேசியது பிசிசிஐ

ஐபிஎல் 2020 பருவம் ரத்தானால் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்: முதன்முறையாக நிதி குறித்து பேசியது பிசிசிஐ

ஐபிஎல் 2020 சீசன் ரத்து செய்யப்பட்டால் இந்தியா கிரிக்கெட் வாரியத்திற்கு 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என பிசிசிஐ பொருளாளர் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ-யால் நடத்தப்படும் ஐபிஎல் 13-வது சீசன் கடந்த மார்ச் மாதம் 29-ந்தேதி நடைபெற இருந்தது. ஆனால் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து சர்வதேச விமானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் மார்ச் 29-ந்தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடரை ஏப்ரல் 14-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.

அதன்பின் இந்தியா ஏப்ரல் 14-ந்தேதி வரை ஊடரங்கு உத்தரவை அமல்படுத்தியது. அதன்பின் மே 3-ந்தேதி வரை அதை நீட்டித்தது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் தொடரை நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளன எனக் கூறப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் கிரிக்கெட் எப்போது தொடங்கும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் முதன்முறையாக ஒருவேளை ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்பட்டால் 3994.64 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமல் கூறுகையில் ‘‘பிசிசிஐ மிகப்பெரிய வருவாய் இழப்பை எதிர்நோக்கி இருக்கிறது. ஒருவேளை ஐபிஎல் போட்டி நடைபெறாவிடில், 3994.64 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்த வருடம் ஐபிஎல் போட்டிக்கான நேரம் கிடைக்குமா? என்பது எங்களால் உறுதியாக சொல்ல முடியாது. எத்தனை போட்டிகளை இழக்கிறோம் என்பதை பொறுத்துதான் சரியான தொகையை கூற இயலும்.

பிராண்ட் மதிப்பு மூலம் 6.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மூலம் 220 மில்லியன் டாலர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja